Read Along (Bolo) -Learn to Read English விளையாடி படிக்கலாம்

விளையாடி படிப்போம் வாருங்கள் குழந்தைகளே...      


   வணக்கம் நண்பர்களே.. இன்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படக்கூடிய குறிப்பாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பக்கூடிய, ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய ஒரு Learning Android App  பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த App ஐ நம் அனைவருக்கும் பரிட்சயமான Google ஆல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பின் பெயர் Read Along (Bolo) : Learn to Read English ( Language learning app through English).
 

     இந்த App ஐ பயன்படுத்துவதன் மூலம் குறிப்பாக குழந்தைகள் ஆங்கிலத்தை விரும்பிப் படிப்பார்கள். ஏனென்றால் இது குழந்தைகளை கவரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதைப்பற்றி நான் இன்னும் கூடுதலாக விரிவாக கூறுகிறேன். உங்கள் மொபைலில் Play Store சென்று Read Along App என்று search bar ல்  டைப் செய்து தேடி install செய்துகொள்ளவும். முதலில் Internet Connectivity ஐ On செய்துகொள்ள வேண்டும். App ஐ Install செய்ய மற்றும் கதைகளை Download செய்ய மட்டும். மற்றபடி இது Offline ல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த App ஐ  Open செய்தவுடன் Diya என்னும் Voice Assistant உங்களை வழிநடத்தும்.  அதில் நீங்கள் எந்த மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களோ அதற்குரிய மொழி option ஐத் தேர்வு செய்துகொள்ளவும்.

   எடுத்துக்காட்டாக நீங்கள் தமிழ் மற்றும்  English  கற்றுக்கொள்ள விரும்பினால்  தமிழ்+ English அல்லது English only  என்பதை தெரிவு செய்து கொள்ளவும். உள் நுழைந்தவுடன் Voice Assistant சொல்லக்கூடிய வழிமுறைகளை கவனமாக பின்பற்றவும் ( Permission and Demo reading activity). உள்நுழைந்தவுடன் குழந்தைகளை கவரும் கூடியவகையில் சின்ன சின்ன கதைகள் படங்களுடன் எளிமையான வார்த்தைகளோடு இருக்கும். நீங்கள் எந்த கதையை Click செய்கிறீர்களோ அந்த கதை Download ஆகி open ஆகும்.   Voice Assistant  நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை உங்களுக்கு Voice மூலமாக Instruction களை சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருப்பார் நீங்கள் அதை முறையாகப் பின்பற்றி ஏதேனும் ஒரு கதையை தேர்வு செய்து அதை  Read செய்ய சொல்லலாம்.

       கதையை Read செய்ய ஆரம்பிக்கும் முன் அந்த வாக்கியத்தில் உள்ள Word ஐ Click செய்தால் Voice Assistant அதை சரியாக உச்சரித்துக்காட்டும். குழந்தைகள் அந்த உச்சரிப்பைக் கேட்டு அதைப் பின்பற்றி சரியாக உச்சரிக்க வேண்டும். அப்படி சரியாக உச்சரித்தால் அவர்களுக்கு ஒரு Star Bonus Point ஆக கிடைக்கும். ஒருவேளை தவறாக  உச்சரித்தால் அதை மறுபடியும் Click செய்து அந்த வார்த்தையின் ஒலியைக்கேட்டு சரியாக உச்சரித்துப் பழகலாம். குழந்தைகள் எத்தனை வார்த்தைகளை சரியாக உச்சரிக்கிறார்களோ அத்தனை Stars ஐ Point value ஆக பெறலாம்.


      குழந்தைகள்  படிக்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அல்லது அந்த ஒவ்வொரு வார்த்தையின் சரியான உச்சரிப்புக்கும் ஒரு Star உங்களுக்கு மதிப்பெண்ணாக கிடைக்கும். எத்தனை வார்த்தைகளை சரியாக உச்சரிக்கிறார்களோ அத்தனை Stars உங்களது Account ல் Credit ஆகிக்கொண்டே இருக்கும். நீங்கள் முதல் முறை பயன்படுத்தும் போது மட்டும் உங்களை போட்டோ எடுத்துக்கொண்டு Name  கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின்னர் வாங்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் Stars ஆக உங்களது Account ல் ஏறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு Level முடிந்த பின்னரும் ஒரு Game (Memory Game / Reading Game) திரையில் தோன்றும். இதுவும் மிகவும் சுவாரசியமான குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டாக இருக்கும்.இது தவிர ஒவ்வொரு Level க்கும்   Bonus Points ம் கிடைக்கும்.

  ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் வீதம் பயிற்சி செய்ய அளவீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமெனில் கூடுதலாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.


      ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் மேம்படுத்த நினைக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில உச்சரிப்பை மாணவர்களுக்கு மேம்படுத்த நினைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதே எனது கருத்து. குழந்தைகள் படிக்கும் ஆர்வத்தை ஒரு விளையாட்டு ரீதியில் கொண்டு செல்லக்கூடிய இந்த அற்புதமான Android app Play store ல் கிடைக்கிறது. அதுவும் நமது Google தான் இந்த app ஐ உருவாக்கியிருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. இந்த app ஐ Install செய்து பயன்படுத்திப்பாருங்கள். உங்களது அற்புதமான கருத்துக்களை Comment ல் பதிவு செய்யுங்கள்.  நன்றி வணக்கம்..

Thanks to Mr.Rajmohan Teacher


Read Along (Bolo)- Learn to Read English App ஐ download செய்ய இங்கு click செய்யவும்.




Post a Comment

1 Comments