ஆங்கில விளையாட்டுகள்-English Learning Games


    எனது அருமை ஆசிரிய நண்பர்களுக்கும், மாணவ கண்மணிகளுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் பயனுள்ள தகவல்களுடன் உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வலைதளமானது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படக்கூடிய எளிமையான Online Learning மற்றும் Interactive Tools பற்றிய தகவல்களை அறிமுகம் செய்து அதை மாணவர்கள், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களும் பயன்படுத்தி கற்றல், கற்பித்தலை மேம்படுத்திக்கொள்ள உருவாக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

    இன்று இக்கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது முழுக்க முழுக்க English Learning ஐ மட்டுமே மையப்படுத்தி அதில் தங்களை வலுப்படுத்தி கட்டமைத்துக் கொள்ள உதவக் கூடிய ஒரு Website ஐப் பற்றித்தான். 

    மாணவர்களுக்கு எப்பொழுதுமே ஆங்கிலத்தைக் கற்பது ஒரு சவாலான விஷயமாகவே இருக்கும். இதை எளிமைப்படுத்தும்  விதமாக ஆசிரியர்களும் பல விதமான வித்தியாசமான உத்திகளைக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களது அளப்பரிய முயற்சிகளை எளிமையாக்கும் பொருட்டு அவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் ஒரு பயனுள்ள  Gaming Website ஐப்பற்றித்தான் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அந்த இணையதளத்தின் பெயர் www.gamestolearnenglish.com ஆகும். இந்த வலைதளமானது 1  முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். LKG and UKG குழந்தைகளுக்கு Picture Vocabulary Games உள்ளது.




        இந்த Website ஆனது முழுக்க முழுக்க Gaming Activities மட்டுமே நிறைந்திருக்க கூடிய ஒரு website ஆகும். இதை Mobile, Laptop அல்லது Desktop இவற்றில் எதில் வேண்டுமானாலும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் Mobile-ல் பயன்படுத்தும் பொழுது நாம் internet வசதியை பெற்றிருக்கவேண்டும். Laptop-ல் அல்லது Desktop-ல் இதில் உள்ள அனைத்து Game-களையும் நாம் ஒருமுறை Download செய்து Install செய்து விட்டோமானால் அதை நாம் Offline-ல் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

       இந்த இணையதளத்தில் நீங்கள் சென்றால் அதனுடைய Home Page ல்  நீங்கள் ஏராளமான Games-களையும் அதற்குரிய சிறிய விளக்கத்தினையும் (Game description) காணலாம். எந்த Game நீங்கள் விளையாட விரும்புகிறீர்களோ அந்த Game ஐ Click  செய்தால் அந்த game loading ஆகி open ஆகும். ஒவ்வொரு game-லும் Easy, Medium, Hard என மூன்று Level-களில் எந்த level உங்களுக்கு வேண்டுமானாலும் select செய்து கொள்ளலாம். அடுத்ததாக  Animals, Home, Transport, Jobs, Places, Numbers, Sports, Food, Colour, Countries போன்ற ஏராளமான தலைப்புகளில்  ஏதாவது ஒரு தலைப்பை Click செய்து Select செய்து கொள்ளவும். இனி நீங்கள் game விளையாடலாம். Game விளையாடும் போது ஒவ்வொரு  Word க்கும் தெளிவான உச்சரிப்புடன் English Pronunciation  ஐ மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம். இந்த வலைத்தளத்தில் உள்ள அனைத்து Game-களுமே முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது.

        எந்த ஒரு Game விளையாடுவதற்கு முன்பு கீழே Scroll செய்து வந்து அதில் உள்ள Description-ல் அந்த Game விளையாட கூடிய வழிமுறைகளை கொடுத்திருப்பார்கள் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அப்புறம் அந்த Game  விளையாட சென்றீர்களானால் அது மிகவும் எளிமையாக இருக்கும்.

       முதலில் ஆசிரியர் அல்லது பெற்றோர் ஒருமுறை விளையாடிவிட்டு பின்னர் மாணவர்களுக்கு விளையாடும் வழிமுறைகளை  கூறி அதன் பின்னர் விளையாட சொல்லும் போது மாணவர்கள் மிகவும் எளிமையாக அதை விளையாடுவர். அதன்பின்னர் நம்முடைய வழிகாட்டுதல்கள் தேவைப்படாது. இந்த வலைத்தளத்தில் உள்ள Game களில்  எனக்கு பிடித்த சிலவற்றை மட்டும் கீழே வரிசைப்படுத்தியுள்ளேன். இதைத்தவிர  மேலும் பல Game-களும் இந்த வலைதளத்தில் உள்ளன.












 மேலே நான் கொடுத்துள்ள Game-களை விளையாடிப் பார்க்க நேரடியாக சென்று அந்த Game மேல் Click செய்தால் அந்த Game ஐ நீங்கள் விளையாடி பார்க்க இயலும். இதைத்தவிர நீங்கள் நேரடியாக www.gamestolearnenglish.com என்ற  Website லும் சென்று அதில் உள்ள அனைத்து Game களையும் விளையாடிப் பார்க்க இயலும்..


என்ன குழந்தைகளே... விளையாட தயாரா..?



விளையாடி பாருங்கள் பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் Share  செய்யுங்கள்...





Post a Comment

0 Comments