களிப்போடு கற்கலாம் ! - PSchool Android App


வணக்கம்.. நண்பர்களே... 

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பயனுள்ள தகவலோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். CORONA வைரஸ் பரவல் காரணமாக நாமும், நம் குழந்தைகளும், மாணவர்களும் வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்கக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பொழுதைக் கழிப்பது என்பது மிகவும் சிரமமான காரியமாக அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் LKG முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய சுட்டிக் குழந்தைகளுக்கு ஒரு அருமையான மற்றும் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கக் கூடிய ஒரு Android App பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். 

        அந்த App ன் பெயர்    pschool.in    இந்த App ஐ சாதாரணமாக  உங்களது Android Mobile ல் Play store ஐ open செய்து search bar ல் pschool.in என்று type செய்து Download செய்து உள்ளே நுழையலாம். அல்லது உங்களது mobile ல் உள்ள எந்த browser ல் வேண்டுமானாலும் open செய்து search bar ல் pschool.in என்னும் முகவரியை உள்ளீடு செய்தும் உள்ளே நுழையலாம். 


அதனுடைய Home Page ல் நீங்கள் நிறைய Menu களை பார்க்க இயலும்..

                                             Coloring 
                                             Writing 
                                             Reading 
                                             Grammar 
                                             Vocabulary 
                                             Quick Math 
                                             Clock 
                                             Science 
                                             Social 
                                             Drag & Drop 
                                             Sudoku 
                                             Word search 
                                             Crossword 
                                             Memory game 
                                             Tamil

         இந்த ஒவ்வொரு Menu விலும்  Click செய்து உள்ளே சென்றால் ஏராளமான activities ஐ பார்க்கலாம். எடுத்துக்காட்டாக Colouring Menu ஐ click செய்தால்  இதில் படங்கள் வரையப்பட்டிருக்கும். இதில் உள்ள படங்களை நாம் வண்ணங்களை தேர்வு செய்து வண்ணம் தீட்டி மகிழ முடியும். படங்களை வரைந்து அதனையும் வண்ணம் தீட்டலாம். இதேபோன்று Writing  Menu வில் Capital Letters, Small Letters, Cursive Writing, Numbers Writing போன்ற அனைத்தும் உள்ளன. இதைத்தவிர Reading Menu வில்  Stories, Passages and Poems போன்றவைகளும் Grammar section ல்  குழந்தைகளுக்கு  தெரியவேண்டிய Basic skills and Activities அடங்கியுள்ளது. 

  இதிலுள்ள ஒவ்வொரு பிரிவிலும் ஏராளமான activities மிகவும் பயனுள்ளதாகவும் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவதாகவும் அவர்களின் சிந்தனையை தூண்டக் கூடிய வகையிலும் அவர்களது நினைவுத்திறனை மேம்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது இதன் மிகப்பெரிய சிறப்பாகும். இதைத் தவிர அவர்களுக்கு குறுக்கெழுத்து விளையாட்டு, SUDOKU  game, Crossword Puzzle, Memory game என இதன் வரிசை நீள்கிறது. இறுதியாக தமிழ் எழுத்துக்கள் வாக்கிய அமைப்பு, குறுக்கெழுத்து போட்டி போன்ற பல்வேறு செயல்பாடுகள் அமைந்துள்ளது.

   இந்த App ல் இடம்பெற்றுள்ள அனைத்து Menu விலும் ஏராளமான activities அடங்கியுள்ளன. என்னால் இந்த கட்டுரையில் அனைத்து activities களையும் பற்றி குறிப்பிட இயலவில்லை. ஆனால் அனைவரும் இந்த App ஐ Open செய்து உள்ளே சென்று ஒவ்வொரு Menu விலும் Click செய்து பார்க்கும்போது கட்டாயம் இதில் எவ்வளவு activities உள்ளன என்பதை புரிந்து கொள்ள முடியும். உண்மையில் இதில் உள்ள செயல்பாடுகளை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வீதம் மாணவர்கள், குழந்தைகள் பயிற்சி பெறும்போது கட்டாயமாக இது அவர்களின் அறிவுத்திறன் மேம்பட உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

     நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு activity யும் வலதுபுறம் உள்ள menu பட்டனை தட்டினால் அதில் My playlist ல் இருக்கும். இதன் மூலம் நாம் எத்தனை activities களை முடித்து இருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள முடியும். மேலும் எந்த ஒரு activity ஐ முடித்து விட்டு Home Page க்கு வர வேண்டும் என்றாலும் இதே menu வில் உள்ள Showcase என்ற பட்டனை click செய்தால் Home menu வந்துவிடும். வீட்டில் உள்ள அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு இந்த App ல்  சென்று பயன்பெறக்கூடிய வகையில் அவர்களை வழி நடத்தினால் கட்டாயமாக மாணவர்கள் இந்த நீண்ட கால விடுமுறையை பயனுள்ள வகையில் மாற்றிக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை...





பயன்படுத்திப்பார்த்து விட்டு தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பர்களே .....

Post a Comment

0 Comments